தாசன் கேசவன்
பல்லவி
என்னுள் புகுந்தென்னை ஆட்டுவிக்கும் திருமாலே
உள்ளன்புடன் உன்னை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
பொன்னடி தொழுதோற்கு இன்னருள் புரிந்திடும்
பன்னக சயனனே சென்ன கேசவனே
சரணம்
புன்னகை முகம் காட்டும் கன்னலே தேனே
முன்வினைப் பயனால் மூவாசைப் பிணியால்
சின்னஞ்சிறியேன் செய்த பிழை பொறுத்து
உன்னடி சேரும் வரம் தர வேண்டுமென
No comments:
Post a Comment