ஆண்டிப்பட்டி சித்தி விநாயகன்
பல்லவி
தாண்டவம் புரிந்திடும் ஈசன் சிவன் மகனை
சித்திவினாயகனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
பாண்டவர் நேசன் கேசவன் மருகனை
தீண்டுமரவினை இடையிலணிந்தவனை
சரணம்
வேண்டுவோர் வேண்டும் வரங்களைத் தருபவனை
காண்பவர் மனங்களைக் கொள்ளை கொள்ளும்
மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும்
ஆண்டிபட்டி ஆனைமுகத்தோனை
No comments:
Post a Comment