Thursday, 31 July 2014

ஆதிலட்சுமி


 

    ஸ்ரீ ஆதிலட்சுமி


 பல்லவி

  ஆதி லக்ஷ்மியின் பாதம் பணிந்தேன்

   மேதினி புகழ்ந்தேத்தும் கேசவன் நாயகி

   அனுபல்லவி

   வேதியரோதிடும் வேதங்கள் வணங்கிடும்

    மாதவன் திருமார்பில் கொலுவிருக்கும் ஸ்ரீ

     சரணம்

     தேவரும் முனிவரும் யாவரும் துதித்திடும்

     பூதலம் போற்றும் பங்கய பதத்தினள்

     சாதித்த புண்ணியரும் பாமரரும் பண்டிதரும்

      தேடிப்பணிந்திடும் திருமகள்  அலைமகள்

   
     

   Sri Adhi Lakshmi.
Sumanasa vandhitha, sundhari madhavi Chandra sahodhari hemamaye,
Munigana manditha, moksha pradhayini ,manjula bhashini, veda nuthe,
Pankaja vasini deva supoojitha sadguna varshani, shanthiyuthe,
Jaya jaya hey madhusoodhana kamini Adhilakshmi sada palaya maam.

 

 


பாலாம்பிகை


      பாலாம்பிகை

    பல்லவி

    அவனியில் நடந்திடும் செயல்களனைத்துமே

    சிவசக்தியாலென்று  அறிந்திடுவோமே

    அனுபல்லவி

   புவனம் போற்றும் கேசவன் சோதரி

   அவளின்றி ஓரணுவும் அசைந்திட இயலாது 

       சரணம்

    அவளருளாலே அவள் புகழ் பாடி

     அவளையே அனுதினம் சரணடைந்திடுவோம்

      அவளே அனைத்துமென்று உணர்ந்த பின்னாலே

      புகழ் பெருமையெல்லாம்   அவளுக்கே கொடுப்போம்
     

        சிவசக்தி இல்லாத நமதுடல் புவியில்

        சவமென்றே அறிந்து செயல் பட வேண்டும்

        பவக்கடல் கடந்திட நம் அனைவருக்கும்

        அவளருலொன்றே என்றும் வேண்டும்

     

       

மீனாக்ஷி




       மீனாக்ஷி 


     பல்லவி

   தாயே நீயே துணை கமலாம்பிகையே

   மாயே மரகதமே கேசவன் சோதரி

        அனுபல்லவி

     ஓயாதனுதினம் உன்னையே துதித்தேன்

      வானவர் தானவர் அனைவரும் வணங்கிடும்

       சரணம்

      ஆனந்தக்கடல் நடுவே அமர்ந்திருப்பவளே

     அஞ்ஞான  இருள் நீக்கி  ஞான ஒளியளித்திடும்

     அம்பிகையே மீனாக்ஷி ஆனந்தப் பேரெழிலே

       கணபதியை ஈன்றவளே காத்தருள் புரிவாய்

      

மோகினி




Sri Ranganathar in Mohini Thirukolam, Srirangam, TN
அமரர் முழுமுத லாகிய ஆதியை,
அமரர்க் கமுதீந்த ஆயர் கொழுந்தை,
அமர அழும்பத் துழாவியென் னாவி, 
அமரர்த் தழுவிற் றினிய கலுமோ.

       Sri Rajagopala Swamy in Mohini Thirukolam, Mannargudi, TN.


தரும மறியாக் குறும்பனைத் தங்கைச் சார்ங்க மதுவேபோல்
புருவ வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே உருவு
கரிதாய் முகம்செய்தாய் உதயப் பருப்ப தத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தா வனத்தே கண்டோமே
(Sri Andal - Nachiyar Thirumozhi)

“The unruly rogue has curved eyebrows, like the Sarnga bow he wields. Did you see the Lord of inconsistencies?” “His body dark, his face red, he looked like the rising Sun over the Eastern mount. We saw him then in Brindavana”.

       மோகினி 


                  பல்லவி

  மோகினியாய் வடிவெடுத்த மோகனக்கண்ணனை

   நாகத்தணையானை  மனமாரத்துதித்தேன்


                  அனுபல்லவி

    சாகசம் செய்து அமரருக்கமுதளித்த

     மேகவண்ணனைத் திருமாலைக் கேசவனை


                         சரணம்

     ஆகம வேத புராணங்கள் போற்றும்

      யோகமுடையவனை திருவரங்கநாதனை

      பாகம் பிரியாளின் சோதரனை மாதவனை

      மோகமுடன் கண்டு அரவிந்த பதம் பணிந்து





     




கணபதி Melukote Fort, Karnataka


கணபதி 


Melukote Fort, Karnataka

  பல்லவி 

 எங்கும் நிறைந்திருக்கும் ஒற்றைக் கொம்பனை 
  மகாகணபதியை  மனமாரத் துதித்தேன் 


  அனுபல்லவி 

 திங்கள் பிறையணிந்த சங்கரன் மகனை 
 பங்கய நாபன் கேசவன் மருகனை 

 சரணம்

  சங்கடமிடர்களையும் மங்கள மூர்த்தியை 
  பொங்கரவு இடையணிந்த துங்கக்கரிமுகனை 
  வெங்கதிரோன் ஒளியை மிஞ்சும் வேழமுகத்தோனை 
   அங்கமில் மதனைவிட பேரழகுடையவனை 

   சிங்காரவேலனின் அருமைச் சோதரனை 
   இங்குமங்குமலைபாயும் மனக்குரங்கை அடக்கிடவும் 
   பொங்கும் மூவாசைப் பிணிதனையே போக்கிடவும் 
   மங்காத புகழ் மேவும்  மணித்வீ ப கணபதியை 
   











Wednesday, 30 July 2014

பஞ்சமுக ஆஞ்சநேயர்














 பஞ்சமுக ஆஞ்சநேயர் 


பல்லவி

அஞ்சு முக மாருதியை ஆஞ்சநேயனை

தஞ்சமடைந்தேன் தயை புரிவாயென்று

அனுபல்லவி

 பஞ்சவர்க்குத் துணை நின்ற கேசவனின் தூதனாய்

  நெஞ்சகத்தில் ராகவனை நிலையாகக் கொண்டவனை

   சரணம்

   அஞ்சாது பகை வெல்ல கிழக்கு  முகமும்

   அஞ்சிடும் நெஞ்சைக் காக்க தெற்கு முகமும்

    நஞ்சுடலை அண்டாதிருக்க மேற்கு முகமும்

    பஞ்சம் தவிர்த்திடும் வடக்கு முகமும்  கொண்ட  ( அஞ்சு ...)

    எஞ்சிய   அதோ முகம் வாழ்விலனைத்து

     வெற்றியும் செல்வாக்கும் வாக்கின் வன்மையும்

      கற்றிடும் கல்வியில் மேம்மையும்  சிறப்பும்

      பெற்றிடச்  செய்திடும்  பெருமைகளுடைய      ( அஞ்சு   )





    

சார் போஸ்ட்







 

                 சார்  போஸ்ட் 


         

       உறவுப் பாலமாய் நட்பின் தொடர்பாய்

        உனக்கும் எனக்கும் இருந்ததன்று

         வரவுக்காகக் காத்திருந்த

         உறவுக்கு மகிழ்ச்சி தந்ததன்று

         பலருக்கும் பயனாய் சேவையாய்

         சிலருக்குப் பொழுது போக்காய்

         உலகுக்கே மிக முக்கியமாய் விளங்கியதன்று

         இலக்கியமும் காதலும்  வளர்த்த ஒன்று

          நலம் நலமறிய ஆவலென்று

          பலரும்  தொடங்கி எழுதியதன்று

          விலைமதிப்பில்லாத பொக்கிஷாமாக

            கொண்டாடிய ஒன்று

            அடடா வருத்தமே அது அழிந்துவிட்டதின்று !!!


     

   

கோதை


          கோதை 



       பல்லவி

      கோதாப்பிராட்டியை மனமாரத்துதித்தேன்

      யாதவ குலத்துதித்த கேசவனை மணந்த

       அனுபல்லவி

        கீதாச்சாரியனின் புகழ் பாடிக்கொண்டாடி

        வேதத்திற்கிணையான பாவைப்பாட்டெழுதிய

        சரணம்

        மாதம் முழுவதும் நோன்பிருந்து துதித்து

        பாதம் பணிந்து அரங்கனையே நினைந்து

        தீதின்றிப் பூமாலை தினம் சூடிக்கொடுத்து

        மாதவனே அனைத்து மெனத் தன்னையே அர்ப்பணித்த

       

   
        

சக்கர கணபதி



சக்கர கணபதி 


பல்லவி

சக்கரமும் கதையும் வைத்திருக்கும் கணபதியை

விக்ன விநாயகனை மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

பக்தர்களை காத்தருளும் பரம தயாளனை

முக்கண்ணன் மகனை கேசவன் மருகனை

சரணம்

 அக்கிரமம் செய்த யானைமுக அரக்கனை

 நிக்கிரகம் செய்த ஆனைமுகத்தோனை

  அக்கிரகாரம்தனில் குடிகொண்ட கரிமுகனை

  பக்க பலமாயிருந்து எனைக்காத்தருள 

திருப்பாவையமுதம்



அழகிய கப்பல்கள் உலாவும் திருப்பாற்கடலை, மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற அரவத்தை கயிறாக்கிக் கடைந்த பரமமூர்த்தி, கேசவன் (அழகிய சுருண்ட நீள்முடி கொண்டவன்) மற்றும் மாதவன் (திருமகளின் கணவன்) என்று திருநாமங்களைக் கொண்டவன்.
சந்திரனை ஒத்த அழகிய முகத்தை உடைய, அழகிய ஆபரணங்களை அணிந்த, இடைச் சிறுமியர், அப்பிரானை அடைந்து திருவடி பணிந்து, அவனது சன்னிதியில், தாங்கள் வேண்டிய பறையைப் (தங்கள் புருஷார்த்தத்தைப்) பெற்ற அந்த செய்தியை விளக்கி,
அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் திரு அவதரித்தவளும், அன்றலர்ந்த தாமரை மலரால் ஆகியகுளிர்ந்த மாலையை அணிந்த பட்டர்பிரானின் (பெரியாழ்வார்) திருமகளும், ஆன கோதை நாச்சியார், அருளிச் செய்த சங்கத் தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரங்களை, குறையில்லாமல் ஓதும் அடியார்களுக்கு
நான்கு பெருமலைகளை ஒத்த திருத்தோள்களையும், சிவந்த திருக்கண்களையும், அழகிய திருமுகத்தையும் கொண்ட, அனைத்துச் செல்வங்களுக்கு அதிபதியான திருமால், இம்மையிலும், மறுமையிலும் கருணை காட்டி, (அவன் சேர்க்கையால்) பேரானந்தத்தை அருளுவான் !

  திருப்பாவையமுதம் 

  பல்லவி 

  மாதரார் மட்டுமின்றி அடியார்களனைவரும் 
  தீதின்றி ஓதிடும் திருப்பாவை புகழ் கேளீர் 

  அனுபல்லவி 

  வேதங்களின் பொருளை கேசவன் மகிமையை 
   சாதாரணருமறிய ஆண்டாள் அருளிய 
  
    சரணம் 

  கோதை ஓதிய முப்பதும் தப்பாமல் 
   ஒதிடுமடியார்க்கு திண்தோளன் செங்கண்மால் 
   வேதனை வினைதீர்த்து இகபரமிரன்டிலும் 
   நாதனவனருள் தந்து ஆனந்தம் அளித்திடுவான் 





ஆண்டாள்




      ஆண்டாள் 



       பல்லவி


   ஆண்டாளை எனையாண்ட ஆண்டவனை  ஆண்டாளை

    வேண்டிப் பதம் பணிந்து மனமாரத்துதித்தேன்


     அனுபல்லவி

     பூண்டானாயந்த  அரங்கனையே கொண்டவளை

     சூடிக்கொடுத்த சுடர்கொடியைத் தாயாரை


      சரணம்

     வேண்டுதல் வேண்டாமை இல்லாத கேசவனை 

      காண்டீபன் பார்த்தனுக்கு சாரதியாய் நின்றவனை

      தீண்டுமரவணையில் பள்ளிகொண்ட திருமாலை

      வேண்டித்துதித்துத்  திருப்பாவை பாடிய

      

Tuesday, 29 July 2014

பிரமராம்பிகை


பிரமராம்பிகை


பல்லவி


பிரமராம்பிகையின் மலர்ப்பதம் பணிந்தேன்

 புரமெரித்த பரமன் மல்லிகார்ஜுனன் போற்றும்


அனுபல்லவி

நரர் சுரர் நான்முகன் கடவுளனைவரும்

கரம் பணிந்தேத்தும் கேசவன் சோதரி

சரணம்

 அரக்கன் மகிடனை வதைத்த ஈஸ்வரி

 சரணடைந்தோர்க்கருள் தரும் கருணாகரி

   பிறையணி சூடிடும் திரிபுர சுந்தரி

  பரகதி பெறவே அனுதினம் துதித்து




சதாசிவ குடும்பம்


சதாசிவ குடும்பம் 





பல்லவி

சதாசிவனின் குடும்பம் தனையே

சதா துதித்தேன் அருள் பெற வேண்டி

சமஷ்டி சரணம்

பதாரவிந்தம்  பணிந்திடுமெனையே

 உதாசீனம் செய்யாதிருந்திட

  கதாதரன் ஸ்ரீ கேசவன் நேசனை

  சதானந்தனை தேவியை மைந்தரை

Monday, 28 July 2014

மாயக்கண்ணன்



 மாயக்கண்ணன் 


பல்லவி 

கண்ணனைக் கண்டு மனம் களிப்படைந்தேன் 

வண்ணமுறக் காட்சி தரும் கேசவனை மாதவனை 

அனுபல்லவி 

எண்ணமெல்லாமவன் லீலைகளை நினைந்து 

பண்ணிசைத்து பாடிப் பரவசமானேன் 

சரணம் 

 தண்மதி ஒளிமுகம் தலைதனில் மயில்பீலி

 கண்களில் அழகுடன்  கருமைதீட்டி

  மின்னுமணிமணியும் கௌத்துபமும் பூட்டி

  விண்ணோரும் மண்ணோரும் வியந்து நோக்கிடும்(கண்ணனை •••)

 
   அண்ணாந்து பார்க்கச்செய்யும் அழகு திருமுகமும்

    மண்ணையும் வெண்ணையுமுண்ட பவளவாயும்

    தண்டை கிண்கிணியணிந்த தாமரைப் பாதமும்

    கொண்டவனை கோபியர் மனம் கவர்ந்த மாயனை  ( கண்ணனை •••)



கோவிந்தன்


கோவிந்தன் 


பல்லவி 

 கோவிந்தனே எந்தன் கண்கண்ட தெய்வம் 

 தூவி மலர் சொரிந்து அவன் பாதம் பணிந்தேன் 

அனுபல்லவி

 பூவிதழ் மலர்ந்து புன்னகை  புரிபவன் 

 நாவிற்கினிய  நாமம் பல  உடையான் 

 சரணம் 

 கூவியழைத்தால் ஓடோடி வருவான் 

 தாவியணைத்துத்  துன்பம் களைந்திடுவான் 

 தேவியைத் தன் மார்பில் சூடிய  மாலவன் 

 கோவில் கொண்டென் மனத்தில் கொலுவிருக்கும் கேசவன் 















नारायण




नारायण  नारायण नारायण नारायण नारायण नारायण नारायण नारायण
नारायण  नारायण नारायण नारायण नारायण नारायण नारायण नारायण


ॐ श्री केशावाय नमः 

பத்ரகிரி வைகுண்ட ராமன்




     பத்ரகிரி  வைகுண்ட ராமன்


   பல்லவி


  கருடவாகனனை கமலனாபனை

  அருள்தரும் வைகுண்ட ராமனைப் பணிந்தேன்

   அனுபல்லவி

  தருமநெறி காக்க மானுடனாயவதரித்த

  திருமாலைக் கேசவனை கோதண்ட ராமனை

சரணம்

 உருகி உளமாரத்  துதித்த சபரிக்கு

கருணையுடன் வீடு பேறளித்த ராகவனை

திருவடியாலகலிகை சாபம் தீர்த்தவனை

இருள்சூழென் மனம் ஒளியுறச் செய்திட.     ( கருட ...)

வருந்தித் துதித்திடுமடியார் நலம் பேணும்

 கருணாமூர்த்தியை கலியுக வரதனை

 பெருமைக்குரிய பத்திரகிரித் தலத்தில்

 திருமகள் சீதையுடன் எழுந்தருளிக் காட்சி தரும்  ( கருட ...)

அரங்கநாயகி

    அரங்கநாயகி 

 
       பல்லவி

      அரங்கநாயகியின் பதமலர் பணிந்தேன்

      கிறங்க வைக்கும் அழகுடைய அன்னை


       அனுபல்லவி

     வரங்களை அடியார்க்கு அள்ளி அளித்திடும்

      அரங்கநாதன் அருகிருந்து போற்றும்

       சரணம்

       சுரங்கம் நிறைந்த கருணை நிதி வைத்திருக்கும்

       அரங்க மாநகர் அணிவிளக்கைத் திருமகளை

        பராங்குசன் புகழ்ந்தேத்தும் கேசவன் துணைவியை

        இரங்கி மனம் கனிந்து எனக்கருள வேண்டுமென

       





     





     


       

குழலூதும் கணபதி

குழலூதும் கணபதி

பல்லவி

குழலூதி மனம் கவரும் அழகனை கணபதியை

கழலடி பணிந்து எனக்கருள வேண்டினேன்

அனுபல்லவி

 அழலேந்தும் முக்கண்ணன் சங்கரன் மகனை

  சுழலும் சக்கரக்கையன் கேசவன் மருகனை

   சரணம்

   தொழுதிடுமடியார்க்கு நலம் தரும் கரிமுகனை

   பழவினைப் பயன்களைக் களைந்திடும் ஐங்கரனை

   முழு முதற்கடவுளை முந்தி விநாயகனை

   மழலைமொழியில் பாடல் புனைந்து












மல்லிகார்ஜுனன்






மல்லிகார்ஜுனன் 


  பல்லவி

மல்லிகார்ஜுனனை  மகாதேவனை

 ஸ்ரீசைலம் திருத்தலத்தில் மனமாரத் துதித்தேன்

   அனுபல்லவி

   நெல்லிக்கனி பெற்று பொன்மழை பொழியச் செய்த

  ஆதி சங்கரர்  வணங்கிய சங்கரனை

   சரணம்

   கல்லாலும் வில்லாலும் காலாலுமுதைத்த

  எல்லா அடியார்க்கும் அருள் செய்த ஈஸ்வரனை

   சொல்லற்கரியானை  கேசவன் நேசனை

   நல்லருலெனக்கருள வேண்டுமெனப் பணிந்து








Sunday, 27 July 2014

அழகிய கணபதி


     அழகிய கணபதி 


   பல்லவி

   ஆனைமுகனை அழகிய கணபதியை

   சேனை முதலியை  மனமாரத் துதித்தேன்

   அனுபல்லவி

   தானைத் தலைவானாய் கணங்கள் கொண்டாடும்

   பானை வயிற்றானை  கேசவன் மருகனை

    சரணம்

   வானுறை தேவரும் இந்திரனும் நந்தியும்

   கானுறை முனிவரும் அனைவரும் பணிந்திடும்

   தீன சரண்யனை விக்ன விநாயகனை

   ஊனம் களைந்தென்  மன இருள் நீங்கிட 

Saturday, 26 July 2014

வைகுண்ட ராமன்








வைகுண்ட ராமன்


 பல்லவி

 பத்ராசலம் தனில் அழகுடன் கொலுவிருக்கும்

 வைகுண்ட ராமனை மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

பத்தவதாரமெடுத்தது  போதாமல்

பக்தனுக்கருள் புரிய அவனியிலவதரித்து

சரணம்

 உத்தமி சீதையும்  தம்பி  இலக்குவனும்

  உடனருகில் நின்று பணிவுடன் வணங்கிட

 சுகசனகாதியரும் தேவரும் முனிவரும்

 வினயமுடன் துதித்திடும் மாதவனைக் கேசவனை



சுந்தர கணபதி


 சுந்தர கணபதி

பல்லவி

 எந்தனுக்குத் துணையாக இருந்திட வேண்டுமென 

 கந்தனுக்கு மூத்தோனை கணபதியை துதித்தேன் 

 அனுபல்லவி 

  நந்தகோபன் மகன் கேசவன் மருகனை 

  சந்திரகலைதனை சூடிய கரிமுகனை 

   சரணம் 
   
    இந்திராதி தேவரும் முனிவரும் நான்முகனும் 

    நந்தியும் கணங்களும் வந்தனை புரிந்திடும் 

    சுந்தர வடிவினனை  ஆனைமுகத்தோனை 

     சிந்தையில் வைத்து  சீரடி போற்றி 


Lord Ganesha made of 514-carat diamond! This idol is made of a single piece of diamond and was found in one of Orra’s factories in Africa.This sparkling idol is probably the biggest Ganesh idol made in Diamond ever.






ஸ்ரீ வீரராகவன்


ஸ்ரீ வீரராகவன் 



பல்லவி

 வீரராகவனை மனமாரத்துதித்தேன்

 வீடணனுக்கபயம் தந்த கேசவனை மாதவனை

அனுபல்லவி

 பாரெங்கும் புகழ் விளங்கும் பட்டாபி ராமனை

  கார் வண்ண மேனியனைக்  கோசலை புதல்வனை

  சரணம்

 ஸ்ரீ ராமச்சந்திரனை ஆதவகுலத்துதித்தவனை

  சிவன்வில் வளைத்தொடித்து சீதையை மணந்தவனை

  சூடாமணி கொடுத்து அனுமனுக்கருள் புரிந்து

   வைதேகி மனம் கவர்ந்த கோதண்ட ராமனை





Friday, 25 July 2014

ஆமருவியப்பன்



ஆமருவியப்பன் 


பல்லவி

ஆமருவியப்பனை அழுந்தூர் கேசவனை

தேமதுரத் தமிழால் பாடித் துதித்தேன்

அனுபல்லவி

பூமுகம் காட்டி புன்னகை புரிந்திடும்

சாமள வண்ணனை மோகனக் கண்ணனை

சரணம்

நாமமாயிரமுடைய நாராயணனை

பூமகள் திருமகள் இருவருமுடனிருக்கும்

தாமோதரனைத் தாமரை நாபனை 

காமாதியறுபகையகன்றிட வேண்டியே 

ஸ்ரீ லஷ்மி நரசிம்மன்




                                             ஸ்ரீ லஷ்மி நரசிம்மன்

                                                                    பல்லவி

                                 ஸ்ரீலஷ்மி நரசிம்மனைத் துதித்தேன்

                                 பாலன் பிரகலாதனுக்கருள்செய்த கேசவனை

                                                                  அனுபல்லவி

                                  காலனும் கலங்கிடும் வடிவுடையவனை

                                  மாலனை  மதுசூதனனை இரணியனை வதைத்தவனை

                                                                  சரணம்

                                   சாலச்சிறந்த  அழகிய சிங்கனாய்

                                  ஞாலமுய்யவென  அவதரித்தவனை

                                   மூலப்பொருளைக்  கமலநாபனை

                                    பூலோகம் போற்றும்  நாராயணனை

                               


                             
                                                                                           
                                                                                           
                                         






No comments:


Post a Comment


பாண்டுரங்கன்

பாண்டுரங்கன்

பல்லவி

பாண்டுரங்கனை பண்டரினாதனை

 பாதம்  பணிந்து  மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

காண்டீபன் பார்த்தனுக்குத் தேர் நடத்தி உதவிய

பாண்டவர் நேசனைக் கேசவனை மாதவனை

சரணம்

காண்பவர் மனங்களைக் களிக்கச்  செய்திடும்

மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண் டிடும்

வேண்டுதல் வேண்டாமை இல்லாத தேவனை

ஆண்டருள்வாயென வேண்டி வணங்கி 

Thursday, 24 July 2014

ஸ்ரீ லஷ்மி நாராயணன்


                                             ஸ்ரீ லஷ்மி நாராயணன் 

                                                                    பல்லவி

                                 ஸ்ரீலஷ்மி நாராயணனைத்  துதித்தேன்

                                 பாலன் பிரகலாதனுக்கருள்செய்த கேசவனை

                                                                  அனுபல்லவி

                                  காலனும் கலங்கிடும் வடிவுடையவனை

                                  மாலனை  மதுசூதனனை இரணியனை வதைத்தவனை

                                                                  சரணம்

                                   சாலச்சிறந்த  அழகிய சிங்கனாய்

                                  ஞாலமுய்யவென  அவதரித்தவனை

                                   மூலப்பொருளைக்  கமலநாபனை

                                    பூலோகம் போற்றும்  நாராயணனை

                                 


                               
                                                                                             
                                                                                             
                                           






தாசன் கேசவன்




  தாசன் கேசவன் 


பல்லவி

 என்னுள் புகுந்தென்னை ஆட்டுவிக்கும் திருமாலே

 உள்ளன்புடன் உன்னை  மனமாரத்துதித்தேன்

அனுபல்லவி

பொன்னடி தொழுதோற்கு இன்னருள் புரிந்திடும்

பன்னக சயனனே  சென்ன கேசவனே

சரணம்

 புன்னகை முகம் காட்டும் கன்னலே தேனே

முன்வினைப்  பயனால் மூவாசைப் பிணியால்

சின்னஞ்சிறியேன் செய்த பிழை பொறுத்து

 உன்னடி சேரும் வரம் தர வேண்டுமென








ஸ்ரீ ராம நாமம்





Sri Rama 

राम रामेति रामेति रमे रामे मनोरमे ।
सहस्रनाम तत्तुल्यं रामनाम वरानने ॥
Raama Raame[a-I]ti Raame[a-I]ti Rame Raame Manorame |
Sahasra-Naama Tat-Tulyam Raama-Naama Vara-[A]anane ||


" The power of Nama Japa is well known to all. In the epilogue to the great Vishnu Sahasra Nama, Parvathi asks Lord Shiva: How do the wise chant the thousand names in brief? And Lord Shiva responds with the well-known couplet "Sri Rama Rama Rameti, Rame Raame Manorame" Rama Nama, he says, is singularly equal to the thousand names. Scriptures say that the celestial Narada Muni once asked Srimannaryana "Which is your permanent abode?". To this Sri Vishnu replied "Naham Vasami Vaikunte,NahiYogi Hridaye,Yatra Mad Bhakta Gayanthe Tatra Thistami Narada !" which means "Oh Narada, I am not in Vaikunta, nor in the hearts of yogis, you will feel my presence where my devotees sing my name with love and affection". 

When Arjuna asked Lord Krishna, "Oh Lord, how can I perceive when I am engaged in worldly activities?" To this Lord Krishna replied, "Oh Arjuna, you can always do my Namajapam by which you will remain in my pure consciousness". (Bhagvadgita).

ஸ்ரீ ராம நாமம் 


பல்லவி


ஸ்ரீ ராம நாமமே துதிக்கப் பேரின்பமே

மாறாத பக்தியுடன் உளமார உரைப்போர்க்கு


அனுபல்லவி

ஓராயிரம் நாமம் சொன்ன பலனுண்டு

தீரா வினை தீர்க்கும் திருவருள் சேர்க்கும்


சரணம்

ஆராவமுதன் கேசவனின் திருநாமம்

 பாரோர் பணிந்தேத்தும் நாராயணன் நாமம்

 தாரக மந்திரமாய் விளங்கிடும் நாமம்

 தாரணியில் திருமால் வாசம் செய்யுமந்த



Ramaya Rama Bhadraya
Ramachandraya Vedhase
Raghu Nathaya Nathaya
Sitayah Pataye Namaha
To Rama, Ramabhadra, Raghunatha(These are different names of Lord Rama),
the Lord, the Consort of Seetha, our salutations to him.
Sri Rama Rama Rameti
Rame Raame Manorame
Sahasra Nama Tat Tulyam
Rama Nama Varanane
Lord Shiva told this shloka to Parvati I meditate upon Sri Ram as Sri Rama Rama
Rama, the thrice recital of Rama’s name is equal to Recitation of the thousand
names of Lord Vishnu (Vishnu Sahasranama)
Neelambuja shyamala komalaangam
Sita-samaaropita vamabhagam
Paanau-mahaa-saayaka charu-chaapam
Namami Raamam Raghu-vamsha naatham
I do namaskarams to Lord Rama, who was the best amongst the great kings of
Raghu-kula, who wields his great bow and arrows, who has a complexion and
softness like that of a blue-lotus, and on whose left sits Goddess Sitaji, his dear
consort.




ராஜகணபதி



ராஜகணபதி 


பல்லவி

அரசராய்க் கொலுவிருந்து அகிலம்தனைக்காக்கும்

ராஜ கணபதியை மனமாரத் துதித்தேன்

துரிதம்

சுரபதி பசுபதி சரஸ்வதியின்பதி

ரகுபதி ரதிபதி அனைவரும் வணங்கிடும் 

அனுபல்லவி

கரமலரில் கதையேந்தி வரம்தரக்காத்து நிற்கும்

அரன்மகனை அய்ங்கரனை  கேசவன் மருகனை

சரணம்

நரர்சுரரும் நந்தியும் கணங்களுமமரரும்

சரவணனும்  முனிவர்களும் கரம்  பணிந்தேத்தும்

சிரசில் பிறையணி சூடிய கரிமுகனை

பரமதயாளனை ஆனைமுகத்தோனை







Wednesday, 23 July 2014

கரிமுகன்



  கரிமுகன் 


பல்லவி

வணங்கிடுமடியார்க்கு வரங்களையளித்திடும்
    
கணபதி அவனிரு  திருவடி  பணிந்தேன்

அனுபல்லவி

 குணம் குலம் கல்வி செல்வமுமளித்திடும் 

 கணங்களின் அதிபதி  புகழ்மிகு குணநிதி 

  சரணம்

   இணைதனக்கில்லாத உத்தமத் தெய்வம்

   கணமுமவன் நாமம் மறவாமல் மனத்தில் 

    துணையெனக்  கொண்டு துதிப்பவர்க்கெல்லாம்

    இணையடி நிழல் தந்து காத்திடும் கரிமுகன்

   

 



எலி வாகனன்



 எலி வாகனன்

பல்லவி

ஒலி தரும் சங்கின்   நாதமாய் விளங்கும்

 ஓங்கார  கணபதியை மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

நலிந்தவர்க்கருளும்    ஸ்ரீ கணநாதனை

உலகமுண்டுமிழ்ந்த கேசவன் மருகனை

சரணம்

பொலிவுடன் திகழும் வேழமுகத்தோனை

 எலிவாகனனை ஏகதந்தனை

 கலியுகக்கடவுளை ஆனைமுகத்தோனை

 நலமுடனெனைக் காக்க வேண்டுமெனப் பணிந்து


உரகமெல்லணையான்








  உரகமெல்லணையான் 


 பல்லவி

கோட்டியூர் பிரானை சௌம்ய நாராயணனை

 மாதவனைக் கேசவனை மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

 நாட்டிலனைத்து முனிவரை அமரரை

 வாட்டி வதைத்த இரணியனை அழித்தவனை

 சரணம்

 மாட்டினை மேய்த்தவனை மதுசூதனனை

 காட்டிலும் மேட்டிலுமலைந்தவனை ராகவனை

 ஈட்டிய புகழுடைய உரக மெல்லணையானை  

 வீ ட்டினையளித்தெனை ஆண்டருளவேண்டுமென
 

 












Tuesday, 22 July 2014

அம்பலவாணன்




" உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
  நிலவு லாவிய நீர்மலி வேணியன்
  அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
  மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்."

அம்பலவாணன் 

பல்லவி 

 நிலவணிந்த பெம்மானை அம்பலவாணனை 

உலகநாதனை மனமாரத்துதித்தேன் 

அனுபல்லவி 

சுலபமாயுளம் குளிர்ந்தடியார்க்கருள் தரும்  

அலகிலாவிளையாட்டுடையானை சிவனை 

 சரணம்   

புலன்களின் பின்னே அலைந்திடும்  மனத்தினை 

நிலைபெறச்செய்திடும் வரம் தர வேண்டி 

தலங்கள்  தோறும் வலம் வந்து அனுதினம் 

 மலர்ப்பதங்களைப் பற்றிப் பணிந்து 







வைத்திஸ்வரன்


வைத்திஸ்வரன் 


பல்லவி

 வையகம் போற்றும் வைத்தீஸ்வரனை

 ஐயனை சிவனை மனமாரத்துதிதேன்

அனுபல்லவி

பையத் துயிலும் கேசவன் நேசனை

தையல் நாயகி மனங்கவரீசனை

சரணம்

மெய்யப்பனுமயனும் அடிமுடி தேடிய

மெய்ப்பொருளை ஒளியை அருணாசலனை

மெய்யடியார் துதிக்கும் நமச்சிவாயனை

பொய்யாமொழி போற்றும் பரமேஸ்வரனை 

மூலாதாரமூத்தி

மூலாதாரமூத்தி 


பல்லவி

மூலாதார மூர்த்தியே சரணம்

காலாந்தகன் மகனே கற்பக களிறே

அனுபல்லவி

வேலாயுதனின் மூத்தோனே ஐங்கரனே

நீலநிறத்தழகன் கேசவன் மருகனே

சரணம்

 பூலோகம்தனில் பிறந்து பிழைபல புரிந்து

ஆலோசனையின்றி உழன்று திரிந்த என்னை

காலத்தில் தடுத்தாண்டு காத்தருள வேண்டுமென

ஞால முதல்வனே உனை  வேண்டி பதம் பணிந்தேன்





Monday, 21 July 2014

காதல்



     காதல் 




   காதல் செய்தேன் கலி தீர்ந்தேன்

  மாதவனை மதுசூதனனைக் கேசவனை

 வேதங்கள் பணிந்திடும் பாதமுடையவனை

  கீதையை ஓதிய யாதவ குலத்தோனை

  யாதுமாகி நின்ற காளியின் சோதரனை

  மேதைகள் வணங்கிடும் கமலபதத்தானை

   சாதித்த புண்ணியர் துத்திடும் பரமனை

   வேதியர் ஓதிடும் மந்திரப்பொருளை

   பூதலம் புகழ்ந்தேத்தும் தேவாதி தேவனை

    நாத சங்கீத கலா ரசிகனை

    சீதக் கடலில் பள்ளி கொண்டிருக்கும்

   ஏதமிலாத நாராயணனை

   காதல் செய்தேன் கலி தீர்ந்தேன் 
 

  

Sunday, 20 July 2014

வாரண முகன்



 வாரண முகன் 


 பல்லவி

கடைக்கண் பார்த்தெனை காத்தருள வேண்டுமென 

 மகா கணபதியை மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

இடைக்குலத்துதித்த  கேசவன் மருகனை

 நடையழகுடைய  வேழமுகத்தோனை

சரணம்

தடைகள்  எதுவுமின்றி எடுத்தகருமங்கள்

நடைபெறவேண்டி  அனைவரும் முதல் துதிக்கும்

 விடைவாகனன் மகனை வாரணமுகனை 

அடைக்கலமடைந்து   மலர்ப் பதம் பணிந்து 


அகிலாண்டேஸ்வரி


அகிலாண்டேஸ்வரி 


பல்லவி

அகிலாண்டேஸ்வரியை மனமாரத் துதித்தேன்

அகிலமனைத்தையும் காத்தருள் புரிந்திடும்

அனுபல்லவி

அகிலாண்டேச்வரன் இடமமர்ந்தவளை

மகிடன் தலை கொய்த மாகாளி பைரவியை

சரணம்

மகரக் குண்டலங்களில் மந்திரவடிவாய்

சகலரும் அருள்பெற வீற்றிருக்கும்

முகில் வண்ண நிறத்தவன் கேசவன் சோதரியை

புகலென அரவிந்த பதம் பணிந்து 









வண்ண கணபதி

வண்ண கணபதி 


பல்லவி

வண்ணமயமான வாரண முகனை

கண்ணாரக் கண்டு மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

 வெண்ணிலவின் பிறைதனை சூடிய கரிமுகனை

 வெண்ணையுண்ட வாயன் கேசவன் மருகனை

சரணம்

 பண்ணிசை நாடக நாட்டிய ரசிகனை

விண்ணவர் மண்ணவரனைவரும் வணங்கிடும்

கண்கவரழகனை  காரமர் மேனியனை 

கண்பார்த்தெனையே காத்தருள வேண்டுமென 


யதார்த்தம் / பதார்த்தம்


யதார்த்தம் / பதார்த்தம் 

நீண்ட தண்டவாளத்தில் அமர்ந்து 

ஆண்டவனிடம் வேண்டுகிறான் 

வாண்டுப்பயல்  -  தின்ன இரண்டு 

போண்டா வேண்டுமென !!!

Saturday, 19 July 2014

ஓம் நமச்சிவாய


ஓம் நமச்சிவாய 


பல்லவி

சிவனருளாலே அவன் நாமம் துதித்தேன்

கவனமெல்லாமவன் பாதத்திலிருத்தி

அனுபல்லவி

புவனமுண்டுமிழ்ந்த கேசவன் நேசன்

தவமுனிவோர் துதிக்கும் அருள்தருமீசன்

சரணம்

அவனியிலவனுக்கு அவனேநிகர்

பவபயம் போக்கும்  அவனது நாமம்

குவலயம் காக்கும் ஈசனின் நாமம் 

சிவபுரமளிக்கும்  சிவனது  நாமம்






சமயமறிதல்


    சமயமறிதல்


  காக்கைக்கு கூகையை வெல்ல முடியாதிரவில்

  கூகைக்கோ பகலில் காக்கையை  - அதுபோல

   எதுவும் வெல்ல எவரும்

   காலம் கருதி இடத்தார் செயல் படுதல் நன்று !

ஸ்ரீ துர்கை


ஸ்ரீ  துர்கை 



 பல்லவி

 துர்கா தேவி சரணம் சரணம்

  தர்ம நெறி காக்க தரணியிலவதரித்த

 அனுபல்லவி

 சர்ப்பக் குடையின் கீழ் வீற்றிருப்பவளே

  கற்பகத் தருவே கேசவன் சோதரி

 சரணம்

 தற்பரன் சிவனின் இடமமர்ந்தவளே

 சற்குண நிர்குண அற்புதமே உந்தன்

 பொற்பதம்பணிந்தேன் ஸ்ரீ கிருஷ்ணமாரி

 நற்கதி பெறவே  உனதருள் வேண்டினேன் 

நர்த்தன கணபதி

நர்த்தன கணபதி

பல்லவி

 நடனம் புரிந்திடும் ஆனைமுகத்தோனை

 நர்த்தன கணபதியை  மனமாரத் துதித்தேன்

 துரிதம்

  தளாங்கு தகதிமி தகஜுணு தகதிமி 

   தத்தித் தகதிமி தகஜுணு  தகவென 

   ஜதியோடு  இசையோடு சுருதியோடு சேர்ந்து

  அனுபல்லவி

விடமுண்ட கண்டன் மகனை ஐங்கரனை

கடல் நடுவே கிடந்துறங்கும் கேசவன் மருகனை

சரணம்

அடலேறும் கணங்களும் தேவரும் விண்ணுலக

மடந்தையரும் முனிவரும் மறைகளும் முருகனும்

 பட அரவும் இந்திரனும் மூஷிகனும்  உடனாடும்

 புடமிட்ட பொன்னை புவி போற்றும் கரிமுகனை


















தவம் = சிவம்



  தவம் = சிவம்

  இரண்டு 


   ஒன்றாக 

   ஒன்றும் 

    இல்லாததாகும் 

    காலம்  வர 

     காத்திருப்போம் 

     இனி 

     

       

Friday, 18 July 2014

ஸ்ரீ லலிதாம்பிகை





 ஸ்ரீ லலிதாம்பிகை

  பல்லவி

   அம்பிகை நீயே அருள்புரிவாயே

   நம்பித்துதிதேன் தாயே - லலிதா

     துரிதம்

     ஆடியில் நாடித் துதிப்பவர்க்கெல்லாம்

    கோடி வினைதீர்க்கும் காளி பைரவி

   அனுபல்லவி

    உம்பர் முனிவர் தொழும்  சங்கரி  கௌரி

    அம்புய நாபன் கேசவன் சோதரி

    சரணம்

    சம்பு கபாலியின் மனங்கவர் கற்பகமே

     சும்ப நிசும்பரை அழித்தவளே தேவி

    வெம்பவக் கடலினைக் கடந்திட வேண்டியே

     செம்பொற் பதம் பணிந்தேன்  ஸ்ரீ க்ருஷ்ணமாரி


பிள்ளையாரப்பன்


 

 பிள்ளையாரப்பன் 


  பல்லவி

 அழகுடன் திகழும் ஆனைமுகத்தோனை

 நிழலவன் கழலென நம்பித்துதித்தேன்

 துரிதம்

 அழகன் முருகன் நந்தி கணங்கள்

  நரர்சுரர் முனிவர் நான்முகன் வணங்கிடும் 

 அனுபல்லவி

 சுழலும் சக்கரக் கையன் கேசவன் மருகனை

 பழகு தமிழ் போற்றும் பிள்ளையாரப்பனை

 சரணம்
 
 பழம்  பாக்கு வெற்றிலை நைவேத்தியம் வைத்து

 தொழுதிடுமடியாரின்   துயரிடர்  களைபவனை

  அழலேந்தும் முக்கண்ணன் மகனைக்கரிமுகனை

  முழுமுதற்கடவுளை மோதகப்பிரியனை

 
 
 
 





ஆராவமுதன்


 ஆராவமுதன் 


பல்லவி 

ஆராவமுதனை சாரங்கபாணியை  

நாராயணனை மனமாரத்துதித்தேன் 

துரிதம் 

நாரதர் நான்முகன் நரர்சுரர் சுரபதி 

சுகசனகாதியர் போற்றிப் பணிந்திடும் 

அனுபல்லவி 

தீராத காதலுடன் திருமார்பில் வீற்றிருக்கும் 

காரார் குழலாள் கோமளவல்லி விரும்பும் 


சரணம் 

மாறாத பக்தியுடன் பணிந்திடுமடியார்க்கு 

தாராளமாயருள் அள்ளியளித்திடும் 

ஓராயிரம் பெயருடைய கேசவனை 

தீரா என் வினைபயன்கள் தீர்த்தருள வேண்டுமென 

Thursday, 17 July 2014

தமிழ்





தமிழ் 


அமிழ்தினுமினிய தமிழை
தமிழர் நாமனைவரும் நேசிப்போம்
தமிழ் மொழியையே சுவாசிப்போம்
தமிழிலேயே தினம் பேசுவோம்-தூய
தமிழிலே தொடர்பு கொள்வோம்
தமிழ்ப்பண்பையே  பரப்புவோம்
தமிழராய் உயர்வோம்
தமிழராய் உறவு கொள்வோம்
தமிழ்த்  தொண்டு செய்வோம்
தமிழினம் வளர்ப்போம் 






மறைபுகழ் கணபதி



மறைபுகழ் கணபதி 



பல்லவி

குறைகளைக் களைந்து நிறைகளையளித்திடும்

மறைபுகழ் கணபதியை மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

பிறை நிலவணிந்தவனை  கேசவன் மருகனை

அறவோர் வணங்கிடும் ஆனைமுகத்தோனை

சரணம்

 உறவு பாசத் தளைகளைக் களைந்து

 இறைவனின் நாமமே இதயத்திலிருத்தி

கறைபிறவிப் பிணி விலக வேண்டுமெனத் துதித்து

சிறையுடல் நீங்கி பரகதியடைந்திட 


திருக்காட்டழகிய சிங்கபெருமாள்




 திருக்காட்டழகிய  சிங்கபெருமாள்

பல்லவி

திருக்காட்டழகிய  சிங்கபெருமாளை

திருமாலைக்கேசவனை மனமாரத் துதித்தேன்

துரிதம்

குரு நாரதரும் சுகசனகாதியும்

கருடனுமனந்தனும் அனுதினம் வணங்கிடும்  


அனுபல்லவி

திருமகள் அருகிருந்து பேரழகு சேர்க்கும்

கருணைக் கடலை தீனருக்கருள்பவனை

சரணம்

சிறுவன் பிரகலாதனுக்கு அருளளித்தவனை

தருமம் தவறிய இரணியனை அழித்தவனை

அருந்தவ முனிவர்கள் பணிந்திடும் பரமனை

பெருமைக்குரிய திருவரங்கம் தலத்துறையும்