ஆனந்த தாண்டவமாடிய….
பல்லவி
ஆனந்த தாண்டவமாடிய சிவனை
வான் புகழீசனைப் பாடித் துதித்தேன்
அனுபல்லவி
வானும் புவியுமளந்த கேசவன் நேசனை
தேனார் மொழியாள் சிவகாமி நாயகனை
சரணம்
ஊனுயிர் தந்தவனை உலகநாதனை
மோனத்தவம் செய்யும் முனிவர்கள் துதித்திடும்
கூனல் பிறையணிந்த அகிலாண்டேச்வரனை
ஞானமும் நல்வாழ்வும் யான் பெற வேண்டியே
No comments:
Post a Comment