எனை எழுத வைக்கும் …..
பல்லவி
எனை எழுத வைக்கும் ஶ்ரீமன் நாராயணனே
உனையே சேரும் இகழும் புகழும்
அனுபல்லவி
அனைத்தும் நீயென அறிந்தேன் கேசவனே
இனி நீ வேறு நான் வேறு உண்டோ இவ்வுலகில்
சரணம்
முனைப்புடன் உனைத் துதிப்பதன்றி
எனக்கு வேறு பணியில்லை இவ்வலகில்
சினந்தெனை வெறுத்தாலும் பரிந்தெடுத்தணைத்தாலும்
உனது திருவடியே புகலெனக்கு
No comments:
Post a Comment