Friday, 29 March 2024

உன் நினைவே தாயே…..

 


                                         உன் நினைவே தாயே…..


                                                  பல்லவி

                              உன் நினைவே தாயேயென் பேச்சிலும் மூச்சிலு்ம்

                              உன்னையே நினைத்தேன் அன்னனையே முப்போதும்

                                                 அனுபல்லவி

                              சென்ன கேசவன் சோதரியே மாயே

                              முன்னைப் பழம் பொருளே மூவருக்கும் முதலே

                                                    சரணம்

                              மனதிலுன் நினைவே வாக்கிலுன் நாமமே

                              அனைத்தும் நீயென அறிந்த பின்னாலே

                              கனவிலும் நினைவிலும் உன் நாமமே துதித்தேன்

                              தனக்குவமையில்லாத லலிதாம்பிகையே

                                                            

                              

அம்பிகை எப்படி நினைத்து வழிபட வேண்டும்

மனம்‌, வாக்கு, காயம்‌ என்னும்‌ மூன்று கரணங்‌களாலும்‌ அம்பிகையே வழிபட வேண்டும்‌. இந்த மூன்றிலும்‌  சிறப்பானது மனம்‌. அம்மையை மனத்தால்‌ நினைப்பதற்கு இன்னது தான்‌ நேரம்‌. இன்னது தான்‌ நிலை என்ற வரையறை இல்லை. 


நாம்‌ எப்போதுமே மூச்சு விட்டுக்‌ கொண்டிருக்கிறோம்‌. பேசினாலும்‌ பேசாவிட்டாலும்‌, தூங்கினாலும்‌ விழித்திருந்தாலும்‌ மூச்சு விடுவது நிற்பதே இல்லை. 


டாக்டர்‌ மயக்க மருந்து கொடுக்க, உணர்வு இழந்து உடம்பு கட்டையாகிக்‌ கடக்கும்‌ போதும்‌ மூச்சு விட்டுக்‌ கொண்டிருக்கிறோம்‌. உயிர்‌ உடம்பில்‌ இருப்பதற்கு அடையாளம்‌ மூச்சி தான். 


அம்பிகையின் நினைப்பு மூச்சு விடுவது போல அமைய வேண்டும்‌. நின்றாலும்‌ உட்கார்ந்திருந்தாலும்‌ படுத்திருந்‌தாலும்‌ அம்பிகையின் நினைவு நம்‌ உள்ளத்தே இழையோட வேண்டும்‌. நமக்கு விழிப்பு இருக்கும் போதெல்லாம்‌ "நாம்‌ இன்னார்‌" என்ற நினைப்பு இருந்து கொண்டே இருக்கிறது. 


அதனோடு, நாம்‌ அம்பிகையின் குழந்தை என்பதும்‌ இணைந்து விட வேண்டும்‌. அப்படி ஒரு பழக்கம்‌ வந்து விட்டால்‌ எல்லாக்‌ காலத்தும்‌ அம்மையை நினைத்துக்‌ கொண்டே இருக்கலாம்‌. இத்தகைய நிலையை அடைந்த அபிராமிபட்டர்‌ அம்பிகையை நோக்கிப்‌ பாடுகிறார்‌.


"நின்றும்‌ இருந்தும்‌ கிடந்தும்‌ 

நடந்தும்‌ நினைப்பது உன்னை!"


"எம்பெருமாட்டியே எளியேன்‌ எக்காலத்திலும்‌ உன்னை நினைத்து வாழ்கின்றேன்‌. நின்றாலும்‌ இருத்‌தாலும்‌ படுத்தாலும்‌ நடந்தாலும்‌ உன்னை நினைத்து படியே இருக்கின்றேன்‌" என்கிறார்‌.


எழுத்து : சிவத்திரு.கி.வா.ஜகந்நாதன்

No comments:

Post a Comment