உன்னை மறவா…..
பல்லவி
உன்னை மறவா மனம் தருவாயே ஓ ஜகந்நாதா
என்னை ஆட்கொண்ட பரம்பொருளே கேசவனே
அனுபல்லவி
முன்னைப் பழம் பொருளே முகுந்தா கோவிந்தா
அன்னை தந்தை குருவனைத்தும் நீயே
சரணம்
புன்னை மரத்தடியே புல்லாங்குழலூதி நிற்கும்
கன்னையனே கருமுகில் வண்ணனே
பன்னகசயனனே பாற்கடல் வாசனே
தன்னிகரில்லாத ஶ்ரீமன் நாராயணே
No comments:
Post a Comment