பொற்கழல் பணிந்தேன்….
பல்லவி
பொற்கழல் பணிந்தேன் கற்பகாம்பிகே
நற்கதி பெறவே நாளுமுனை வேண்டி
துரிதம்
நரர் சுரர் நான்முகன் நந்தி கணங்கள்
சுரபதி சுகசனகாதியர் வணங்குமுன்
அனுபல்லவி
உற்சவ நாளில் கோலாகலமாக
சிற்பரன் சிவனுடன் காட்சி தரும் உன்
சரணம்
விற்பன்னர் வேதியர் பலரும் போற்றும்
சொற்களுக்கடங்காத அற்புதமே
கற்பனைக்கெட்டாத மாமேருதனிலமர்ந்த
தற்பரையே தாயே கேசவன் சோதரியே
No comments:
Post a Comment