ஈசனைக் கேசவன் நேசனை…..
பல்லவி
ஈசனைக் கேசவன் நேசனை மகாதேவனை
தேசுடைய சிவனைப் போற்றி வணங்கினேன்
அனுபல்லவி
ஆசுதோஷியெனப் பெயர் கொண்ட தேவனை
பாசத் தளைகளையும் நமச்சிவாயனை
சரணம்
மாசற்றசோதியை மலர்ந்த மலர்ச்சுடரை
மாசிலாமணியை மன்மதனையெரித்தவனை
காசினி போற்றும் கயிலாயவாசனை
வாச மலர் தூவிப் பாசமுடன் துதித்தேன்
No comments:
Post a Comment