எல்லாரும் எல்லா….
பல்லவி
எல்லாரும் எல்லா பாடலுமுனைப்போற்றி
நல்ல படிப் பாடிவிட்டாரினி நான் பாட என்ன உள
அனுபல்லவி
சொல்லும் பொருளுமதுவாகப் பாடிட
நல்லபடி நானும் பின் தொடர்ந்தேன் சிவனே
சரணம்
கல்லாரும் கற்றவரும் போற்றுகின்ற ஈசனே
தில்லைவாழ் சிதம்பர நாதனே நடராஜனே
எல்லாமும் நீயென்றே நானறிவேன் சிவனே
வல்லானே ஆதிபகவனே கேசவன் நேசனே
எல்லோரும் காணும் வண்ணம் ஆடுகின்ற உனதாடல்
நல்லவண்ணம் நான் கண்டேன் என் மனத்திரையில்
நல்லாள் சிவகாமியம்மையும் உடனாட
பதஞ்சலி வியாகரபாதரும் நந்தியுமாட
மாலயனுமிந்திரனும் முனிவர்களுமாட
வேலனுடன் கணபதியும் தேவர்களுமாட
தில்லை மூவாயிரம் வேதியருமாட
பாதச்சிலம்புளும் தண்டையுமாட
நவமணி மாலகளுமாரங்ளுமாட
கழுத்தணிந்த நாகமும் படமெடுத்து ஆட
விரித்த சடையாட சூடிய பிறையாட
ஏந்திய மான் மழுவாட முயலகனாட
No comments:
Post a Comment