நாம சங்கீர்த்தனமே….
பல்லவி
நாம சங்கீர்த்தனமே அனைத்திலும் சிறந்தது ( ராம ) ( கோவிந்த)
பாமரர் பண்டிதரனைவருக்கும் எளிதான
அனுபல்லவி
காமக்ரோதமெனும் அறுபகையகலவும்
மாமறை மந்திரப் பொருளறிய உதவிடும்
சரணம்
சாமத்தில் பகலிரவில் எந்நேரமும்
தேமதுரத்தமிழிலோ தாய் மொழியிலோ
பூமியிலனைவரும் எளிதாகச் சொல்ல வல்ல
ஆமருவியப்பன் கேசவனவனது
No comments:
Post a Comment