பச்சைப் பட்டினி….
பல்லவி
பச்சைப் பட்டினி விரதம் காண இருக்குமுனைக் காண
இச்சை கொண்டேன் தாயே சமயபுரம் மாரியே
அனுபல்லவி
நச்சரவணை துயிலும் கேசவன் சோதரியே
பிச்சாடனர் சிவனின் இடங்கொண்ட நாயகியே
சரணம்
துச்சமென அரக்கர் பலரை மாய்த்தவளே
அச்சம் களைந்தென் மனக்கவலை தீர்க்க
இச்சகத்திலுனையன்றி வேறொரு துணை எனக்கில்லை
மெச்சியுனைப் போற்றி உன் பாதம் பணிந்தேன்
No comments:
Post a Comment