உனதருள் பெறவே…..
பல்லவி
உனதருள் பெறவே தினமுனைத் துதித்தேன்
எனதருமை நமச்சிவாயனே மௌனம் ஏனோ
அனுபல்லவி
உனதடிமுடி தேடிக் கேசவனும் பிரமனும்
தினவெடுத்தலைந்தனர் பயனேதுமின்றி
சரணம்
சனக சனந்தன முனிவருக்கெல்லம்
அனைத்து மறை பொருளும் மறைகளுக்கப்பாலும்
அனவரதம் கல்லால மரத்தின் கீழமர்ந்து
தினமுமோதிய ஈசனே ஆதிநாதனே
No comments:
Post a Comment