என்னைப் பெற்ற தாயே….
பல்லவி
என்னைப் பெற்ற தாயே தர்மாம்பியையே
உன்னைத்துதித்து நானும் உயிர் வளர்த்தேனே
அனுபல்லவி
பன்னகசயனன் கேசவன் சோதரி
பன்னக பூஷணன் ஐயாரப்பன் நாயகி
சரணம்
சொன்ன சொல் காக்கும் அன்னபூரணியே
முன்னைப் பழம் பொருளே மூவருக்கும் முதலே
உன்னருளாலன்றோ உலகமியங்குவது
இன்னருள் தந்தெனைக் காப்பவளும் நீயே
No comments:
Post a Comment