உன்னை மறவா…..
பல்லவி
உன்னை மறவா மனம் தருவாயே
கன்னலே ஶ்ரீராமா உன் பதம் பணிந்தேன்
அனுபல்லவி
சென்ன கேசவனே இன்னமுதே ராகவனே
தன்னிகரில்லாத தனிப்பெருந்தேவனே
சரணம்
தென்னிலங்கையரக்கன் சிரம் கொய்தவனே
புன்னை நல்லூரிலுறை கோதண்ட ராமனே
உன்னருள் இல்லையேல் உலகமுய்யுமோ
பன்னக சயனனே பாற்கடல் வாசனே
முன்னமொரு கல்லைக் காரியையாய்ச் செய்தவனே
இன்னொரு காரிகையின் மானம் காத்தவனே
மன்னு புகழ் ஜானகியின் கரம் பிடித்தவனே
சொன்ன சொல் காக்கும் அயோத்தி மன்னவனே
No comments:
Post a Comment