தங்கரதத்தில் மங்களமாய்…..
பல்லவி
தங்க ரதத்தில் மங்களமாய் பவனி வரும்
செங்கண்மாலைப் பாண்டு ரங்கனைத்துதித்தேன்
துரிதம்
அணிமணிகள் மலர் மாலைப் பட்டாடை புனைந்து
துளபம் கௌஸ்துபம் நெற்றித்திலகமிட்டு
அனுபல்லவி
திங்களும் ஞாயிறும் கண்களாய் விளங்கும்
பங்கய நாபனைக் கேசவனை மாதவனை
சரணம்
சங்கும் சக்கரமுமேந்திய திருமாலை
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவனை
பொங்கரவணை துயிலும் நாராயணனை
மங்காத புகழ் மேவும் தென்னாங்கூர் வாசனை
No comments:
Post a Comment