குமுத மலர் வண்ண…..
பல்லவி
குமுத மலர் வண்ணக் கண்ணனே வேங்கடவா
உமதருள் தந்தெனைக் காத்திட வேண்டினேன்
அனுபல்லவி
அமுதமென வெண்ணை தனை யுண்ட
அமுதனே ஈரடியாலுலகளந்த வாமனனே
சரணம்
அமரருமமரேந்திரனும் துதித்துப்போற்றும்
அமலனே ஆதிபிரானே கோவிந்தா
கமலநாபனே பத்மாவதி நாதனே
சமமெனத் தனக்கொருவரில்லாத கேசவனே
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
உண்டாய் உறிமேல், நறு நெய் அமுது ஆக
கொண்டாய் குறள் ஆய், நிலம் ஈர் அடியாலே
விண் தோய் சிகரத், திருவேங்கடம் மேய
அண்டா! அடியேனுக்கு அருள்புரியாயே..
பொருள் : கோபியர்கள் உறியில் வைத்திருந்த நல்ல நெய்யை அமுதமாக உண்ட கண்ணனே. குள்ள வடிவம் எடுத்து வாமனனாக வந்து இரண்டே அடியால் உலகை அளந்தாய். விண்ணை எட்டும் சிகரத்தையுடைய திருமலையில் அருள்புரியும் திருவேங்கடவா.. பேரருள் புரியும் பெரியோனே! அடியேனுக்கு அருள் புரிய வேண்டும்..
No comments:
Post a Comment