தேடித் தேடி….
பல்லவி
தேடித் தேடித் துதித்தேனே தேனே உன் திருவடியை
ஆடிய பாதனே சிதம்பரநாதனே
அனுபல்லவி
வேடிக்கை பல செய்த கேசவன் நேசனே
நாடித்துதித்திடுமடியார்க்கு அருள்பவனே
சரணம்
காடுதனில் திரியும் சுடலை மாடனும் நீயே
வேடுவன் கண்ணப்பனுக்கருள் செய்த ஈசனே
ஈடிணையில்லாத பரம்பொருளே சிவனே
பாடித் துதித்தேன் உனதருள் வேண்டியே
No comments:
Post a Comment