Sunday, 10 March 2024

வண்ணமிகு கண்ணபுரத்தாளை….

  “ஐந்து தலைப் பாம்பு குடை விரிக்க, தலையில் தங்கக் கிரீடம் அணிந்து, மாதுளம்பூ நிறத்தவளாய், எட்டுக் கரத்திலும் கத்தி, உடுக்கை, தாமரைப்பூ, திரிசூலம், கபால வடிவம், பாசம், காண்டீபம், மணி” ஏந்தி, இடதுகால் பீடத்தில் மடித்திருக்க, வலது காலில் மூன்று அசுரர்களின் தலையை மிதித்த வண்ணம் கிழக்குத் திசை நோக்கி சமையபுரத்தாள் அமர்ந்திருக்கிறார்” என்கிறார்.


                          வண்ணமிகு கண்ணபுரத்தாளை….


                                              பல்லவி

                     வண்ணமிகு கண்ணபுரத்தாளை மனமாரத்துதித்தேன்

                     எண்ணமெல்லாமவளே நிறைந்திருக்கின்றாள்

                                            அனுபல்லவி

                      கண்ணன் கேசவன் சோதரியவளே

                      மண்ணுருவாய்க் காட்சி தரும் மகமாயியவளே

                                                சரணம்

                       கண் கவரழகுடன் சர்ப்பக்குடையின் கீழ்

                       தண்மதி முகத்தாள் பொற்கிரீடமணிந்து

                       எண் கரத்திலுடுக்கை வாள் திரிசூலம்

                       காண்டீபம் கபாலம் மணி உடுக்கையேந்திய


                       வலக்கால் மூன்று அரக்கர்கள் தலைமிதிக்க

                       இடக்கால் மடக்கி பீடத்தின் மேலிருக்க

                       பலவித மலர் மாலை மணிமாலையணிந்த

                       உலகெலாம் காக்கும் சமயபுரம் மாரியை                                           

 

                        


No comments:

Post a Comment