பல விதமாய்ப் போற்றி….
பல்லவி
பல விதமாய்ப் போற்றிப் பாடி விட்டேன் தாயே
நலம் பெற வேண்டியே காமாக்ஷியுனையே
அனுபல்லவி
அலகிலா விளையாடல் பல புரிந்தவளே
உலகுண்டுமிழ்ந்த கேசவன் சோதரியே
சரணம்
உலகெலாம் படைத்தவளே உமா மகேச்வரியே
கலகம் புரிந்த மகிடனை மாய்த்தவளே
சுலபமாயெவரும் அறிய முடியாதவளே
தலங்களுள் சிறந்த காஞ்சியிலுறைபவளே
No comments:
Post a Comment