புள்ளிருக்கு வேளூர்….
பல்லவி
புள்ளிருக்கு வேளூர் தலத்துறையும் சிவனை
தெள்ளு தமிழால் பாடி மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
கள்ளழகன் கேசவன் நேசனை ஈசனை
உள்ளத்தூய்மையுடன் அங்கரகனும் துதித்த
சரணம்
புள்ளினத்தரசர்கள் ஜடாயு சம்பாதி
நல்ல வண்ணம் போற்றி வழிபட்ட
தெள்ளியனை நெற்றிக்கண்ணனை
வெள்ளமெனக் கருணை மழை பொழிந்திடும்
போற்றிய காதல் பெருகப்
புள்ளிருக் கும்திரு வேளூர்,
நால்தடந் தோள்உடை மூன்று
நயனப்பிரான் கோயில் நண்ணி,
ஏற்றஅன்பு எய்தவ ணங்கி,
இருவர்புள் வேந்தர் இறைஞ்சி
ஆற்றிய பூசனை சாற்றி,
அஞ்சொல் பதிகம் அணிந்தார்.
பொழிப்புரை : உள்ளத்தெழும் விருப்பம் மேன்மேலும் மிக, `திருப்புள்ளிருக்கு வேளூரில்' நான்கு பெருந்தோள்களையுடைய முக்கண்ணுடைய பெருமான் வீற்றிருக்கும் கோயிலை அடைந்து, உரிய பேரன்பு பொருந்த வணங்கி, பறவையரசர்களான சம்பாதி சடாயு என்பவர்கள் வணங்கிச் செய்த வழிபாட்டின் பெருமையைப் பாராட்டிப் போற்றி, அழகான சொற்களால் அமைந்த திருப்பதிகத்தை இறைவர்க்கு அணிவித்தார்.
No comments:
Post a Comment