வாளாவிருப்பேனோ….
பல்லவி
வாளாவிருப்பேனோ பிறர் போற்ற உன்னை
தாளேன் நான் தாயே தர்மசம்வர்தனியே
அனுபல்லவி
தாளினைப் பணிந்தேன் கேசவன் சோதரியே
ஏளனம் செய்யாமலெனக்கருள் புரிவாயே
சரணம்
கோளனைத்தும் பணியும் திரிபுரசுந்தரியே
வாளரக்கன் மகிடனை மாய்த்த பைரவியே
ஆளரி போல் விளங்கும் ஐயாரப்பன் மனங்கவர்
ஆளுமையுடையவளே அறம் வளர்த்த நாயகியே
No comments:
Post a Comment