படைப்பதும் நீயே…..
பல்லவி
படைப்பதும் நீயே அழிப்பதும் நீயே
கடைக்கண் வைத்தெனைக் காத்தருள்வாயே
துரிதம்
அரனயனரியும் சுகசனகாதியரும்
சுரபதி நரர் சுரர் வணங்கிடுமீச்வரியே
அனுபல்லவி
இடைக்குலத்துதித்த கேசவன் சோதரியே
சடைமுடி தரித்த ஈசன் நாயகியே
சரணம்
இடை சிறுத்தவளே இமவான் மகளே
படை நடத்தி பல அரக்கர்களையழித்தவளே
விடை வாகனனின் ஒருபாகத்தமர்ந்தவளே
அடைக்கலம் நீயே ஶ்ரீ லலிதாம்பிகையே
No comments:
Post a Comment