சிவலோகநாதனை….
பல்லவி
சிவலோக நாதனை துதித்திடுவோம் தினமே
பவரோகம் தனைக் களைந்திடவே ஈசன்
அனுபல்லவி
நவநீதக்கண்ணன் கேசவன் நேசன்
அவனருள் பெறவே அனைவரும் கூடி
சரணம்
ஆசைக்கடலில் அமிழ்ந்துழலாமலே
பாசத் தளைகளைக் களைந்தனைவரும்
ஈசன் திருவடியே சதமெனப் பணிந்தெம
பாசமகல வழி தேடி என்றும்
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம்
அற்ப சுகத்தை நினைந்தோம்
அற்ப சுகத்தை நினைந்தோம் - அரன்
திருவடிகளை மறந்தோம் - நாம்
அற்ப சுகத்தை நினைந்தோம் - அரன்
திருவடிகளை மறந்தோம்
கற்பித மாயா ப்ரபஞ்சமீதை
கற்பித மாயா ப்ரபஞ்சமீதை
கானல் ஜலம் போலே எண்ணி
சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம்
ஆசைக் கடலில் விழுந்தோம் - நல்
அறிவுக்கறிவை இழந்தோம் - நாம்
ஆசைக் கடலில் விழுந்தோம் - நல்
அறிவுக்கறிவை இழந்தோம்
பாசமகல வழி தேடாமல்
எமப் பாசமகல வழி தேடாமல்
பரதவிக்கும் பாவியானோம்
சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம்
No comments:
Post a Comment