உத்தமமான பக்தனுக்கு பாப புண்ணியங்களை கடந்து அனுகிரஹிக்கும் சக்தி ஜகன்மாதாவுக்கு உண்டு!!!
त्रातव्य एष इति चेत् करुणा मयि स्यात्
त्रायस्व किं सुकृत- दुष्कृत चिन्तया मे ।
कर्तुं जगत्तिरयितुं च विशृङ्खलायाः
कर्माऽनुरोध इति के प्रति वञ्चनेयम् ॥
பரதேவதையே!
என்மேல் கொண்ட கருணையினால்
என்னை எப்பேற்பட்டாவது கரையேற்ற வேண்டும்மென்ற எண்ணம் உனக்கு ஏற்படுமாயின், என் புண்ணிய பாபங்களை நீ ஏன் கணக்கிட வேண்டும்?
அனைத்துப் ப்ரஹ்மாண்டங்களையும் உன் இஷ்டம் போல் சிருஷ்டிக்கவும், அழிக்கவும் சக்தியுடைய உனக்கு, என் பாப புண்ணியங்களாகிய கர்மாவை மீறி என்னைக் காத்தருள சக்தியில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தை!!!
வனப்புடையவளே…..
பல்லவி
வனப்புடையவளே வடிவாம்பிகையே
அனவரதமுனைத்துதிக்குமெனக்கருள்வாயே
அனுபல்லவி
தனபாரம் மிகுந்தவளே கேசவன் சோதரியே
உனதருளில்லையேல் உலகமுய்யுமோ
சரணம்
அனைத்தையும் படைக்கவுமழிக்கவும் சக்தியுடையவளே
நினைத்ததை நடத்தும் தகவுடைய தாயே
உனைத் துதிக்குமென் பாவ புண்ணியங்களை
முனைப்புடனழிப்பது உனக்கொரு பொருட்டோ
No comments:
Post a Comment