Tuesday, 5 March 2024

தன்னிகரில்லாத….

 


अवनीतनयाकमनीयकरं रजनीकरचारुमुखाम्बुरुहम् ।
रजनीचरराजतमोमिहिरं महनीयमहं रघुराममये ॥ ७॥

सुमुखं सुहृदं सुलभं सुखदं स्वनुजं च सुकायममोघशरम् ।
अपहाय रघूद्वहमन्यमहं न कथञ्चन कञ्चन जातु भजे ॥ ८॥


                     தன்னிகரில்லாத….

                            பல்லவி

             தன்னிகரில்லாத தசரதகுமாரனை

             மன்னு புகழ் கோசல ராமனைத் துதித்தேன்

                          அனுபல்லவி

             பன் முகம் கொண்ட அழகனைக் கேசவனை

             மின்னுமொளி தரும் சூரிய குலத்தோனை

                              சரணம்

             பூமி குமாரியின் கரம் பிடித்தவனை

             தாமரை மலரொத்த முகமுடையவனை

             பாமர அரக்கர்  குணம் மாற்றிய தீரனை

             தாமரை நாபன் ராமனைத் துதித்தேன்


             இன் முகம் நன் மனம் நல்ல குணமுடையவனை

             பொன் மனச் செம்மலை நல்ல சோதரனை                           

             வெல்லும் அம்புகளைச் செலுத்தும் வீரனை

             சொல்லும் செயலுமொன்றாக உடையவனை             

இன்னிக்கு ஏகாதசிக்கு .

--வெங்கடேச சுப்ரபாதத்தில்  ரஜனீ ரஜனீ என வரும். என்னவா இருக்கும் என ஆராய்ச்சி பண்ணினதுல...கிடைச்சதைப்பகிர்கிறேன்.

நீங்களே  கேட்டுப் பாருங்களேன்! ரஜினி, ரஜினி-ன்னு ஒலிப்பது போல இருக்கும்! ஆனா அது அந்த ரஜினி இல்ல! அது ரஜநி! ன/ண/ ந...உச்சரிப்பில் வித்தியாசம் உண்டு.

ரஜநி-ன்னா இருட்டு, கருப்பு என்பது பொருள்! 

அவனி தனயா கமநீய கரம்

ரஜநீ கர சாரு முக அம்-புருஹம்

ரஜநீ சர ராஜ தமோ மிகிரம்

மகநீயம் அகம் ரகுராம மயே

அவனி தனயா = பூமியின் மகள் (சீதை) அவனிஜா

கமநீய கரம் = (அவள்) விரும்பும் கரங்களை உடையவனே!

ரஜநீ கர சாரு = (அவன்) கருத்த, கவர்ச்சியான

முக அம்புருஹம் = முகம் தாமரை போல இருக்கு!

ரஜநீ சர ராஜ = இருளில் நடமாடுபவர்களின் (அரக்கர்களின்) அரசன் (இராவணன்)

தமோ மிகிரம் = அவன் தமோ குணத்தைப் (கீழ்க் குணத்தை) போக்கியவன்!

மகநீயம் = மிகச் சிறந்தவன்!

அகம் ரகு-ராம மயே = என் இதயமே அந்த ரகு-ராகு-ராகவ மயமாய் இருக்கு!

சீதை = அவனியின் தனயை!

மண்ணுக்குள் தோன்றியவள்! 

ஸ்ரீதேவியின் அவதாரம்! சீதை பிறக்கவில்லை! உதித்தாள்!

இராமாவதாரம் முடிந்து விட்டதால், இனி அதைப் பார்க்கவே முடியாதே! அந்தக் குறையைப் போக்கவென்றே, இன்றும் வேங்கட இராமனாக வெங்கடராகவன் ஆக விளங்குகிறாய் திருவேங்கடத்தில்!

அகம் ரகு-ராம மயே! = என் இதயமே அந்த ரகு ராம மயமாய் இருக்கிறதே!

 வில்/அம்புறாத் தூணி சுமந்த இராமனின் தழும்புகளை, வேங்கடவன் திருத்தோள்களில் இன்றும் காணலாம்! உரல் இழுத்து, மரம் ஒடித்த கண்ணனின் தழும்புகளை வேங்கடவன் திருவயிற்றிலே இன்றும் காணலாம்!அதனால்தான் கோவிந்தா என்று திருப்பதியில் கூவுகிறோம்!

அடுத்த சுலோகம் மிகவும் சிறப்பானது

சுமுகம் சு-ஹ்ருதம் சுலபம் சு-கதம்

ஸ்வநுஜ அஞ்ச சுகாயம், அமோக சரம்

அபகாய ரகூத்வகம் அன்யம் அகம்

ந கதஞ்சந கஞ்சந ஜாது பஜே

சு-முகம் = நல்ல முகம்

சு-ஹ்ருதம் = நல்ல இதயம்

சு-லபம் = எளிமையானவன்

சு-கதம் = எளிதில் அடையப்படுபவன்

ஸ்வனுஜம் = நல்ல தம்பிகளை உடையவன்

சு-காயம் = அழகிய உடல் வனப்பு கொண்டவன்

அமோக சரம் = வெல்லும் (வீணாகாத) அம்புகளை உடையவன்

அபகாய ரகூ த்வஹம் = அவன் ரகு குலத்தையே உயர்த்தியவன்

அன்ய அகம் = அவனைத் தவிர்த்து, நான் (அகம்)

கதஞ்சந கஞ்சந - எப்போதும் எங்கெங்கும்

ந ஜாது = அறிய மாட்டேன்

ந பஜே = வணங்க மாட்டேன்

பெருமாள் = சு-முகன், சு-ஹ்ருதன், சு-லபன், சு-கதன்!

சு-முக, கழுத்தில் ஓலை கட்டிக் கஇருந்தாலும் தூது போவதும், குதிரைக்குப் போர்க் களத்திலே புல் பிடுங்கிப் போடுவதும் யார் தான் செய்வார்கள்? உண்மையான தம்பியின் உயிர் காக்கும் வேளையிலும், சும்மா "தம்பி" என்று கூப்பிட்ட குகனின் நலத்தை முதலில் பார்த்துவிட்டு, அப்புறமா பரதனை நோக்கி ஓட யாருக்கு மனம் வரும்? அவன் தான் சுலபமானவன்! எளியவன்.

எல்லாம் சரி! ஆனால் அவன் தேவர்களுக்கு மட்டுமே சொந்தமல்லவா? அவர்களுக்கு மட்டும் தானே அருள்வான்?

! யார் சொன்னது? பிரகலாதன், குபேரன், மகாபலி, வீடணன், சுக்கிரன் என்று பலப்பல அரக்கர்களுக்கும் அருள் செய்பவன் ஆயிற்றே!


இராமவதாரத்தை மட்டுமே " *பெருமாள்* " என்று குறிப்பதும் வழக்கம்! அந்த இராமப் "பெருமாள்" வணங்கிய விக்ரகம் " *பெரிய* *பெருமாள்* " (அரங்கன்)!

ஆண்டாளும் இராமனைத் தான் "மனத்துக்கு இனியான் (Sweet Heart)" என்று பாடுகிறாள்! கண்ணனை வெறுப்பேத்தக் கூட இருக்கலாம்! 😊


பின்னாளில் உரைக்கப்பட்ட கீதைக்கு, "அட போப்பா, வாயில சொல்லுறது ஈசி! வாழ்ந்து பார்த்தா தானே தெரியும்?" என்ற பேச்சு வந்து விடக் கூடாது என்று தான்...

* முதலில் இராமனாய், தானே வாழ்ந்து காட்டி

* பின்னர் கண்ணனாய், ஊருக்கே உபதேசம் செய்கிறான்!

அதனால் தான் நம்மாழ்வார் என்னும் மாறன் சடகோபன்

கற்பார்கள் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ?

என்று பாடுகிறார்!

No comments:

Post a Comment