“ பண்டுரங்கன் துதி “
மட்டவிழ் மலர் தூவி விட்டலனைத் துதித்தேன்
பட்ட துயர் நீங்கிடவும் பரகதி பெற வேண்டியும்
கெட்டலையும் மனக்குரங்கையடக்கிடும் வழிபெறவும்
சுட்ட செங்கல் மீது நிற்கும் கேசவனை நினைந்து
வட்ட நிலவைப் பழிக்கும் வதனம் கொண்ட பேரழகன்
துட்டர்களின் கொட்டம் தனை அடக்கிடும் பாண்டுரங்கன்
அட்ட புயகரந்தனிலே வீற்றிருப்பவனை
எட்டெழுத்தானை ஶ்ரீமன் நாராயணனை
பாண்டுரங்க ஹரி ராமகிருஷ்ண ஹரி
விட்டல விட்டல பாண்டுரங்கா
விட்டல விட்டல பண்டரிநாதா
விட்டல விட்டல ஜெய ஜெய விட்டல
No comments:
Post a Comment