ஹே ராமச்சந்திரா சீதாபதியே…..
ஹே ராமச்சந்திரா சீதாபதியே
பாராளும் வேந்தனுன் பாதம் பணிந்தேன்
அனுபல்லவி
நீராரும் கடலுடுத்த நிலமடந்தை தனை மணந்த
சீராளா கேசவனே ஶ்ரீமன் நாராயணனே
சரணம்
ஊர் மெச்சும் மரியாதைக்குரியவனே உத்தமனே
கார்வண்ண மேனியனே கமலக்கண்ணனே
ஓர் வில் ஓர் சொல் ஓரில்லென வாழ்பவனே
சீர் மல்கும் அயோத்தியிலெழுந்தருளிக் காட்சி தரும்
No comments:
Post a Comment