சிவனுனைத் துதித்தேன்….
பல்லவி
சிவனுனைத் துதித்தேன் பவ பயம் களைந்தேன்
அவனியில் உனையன்றி வேறு துணை எனக்கில்லை
அனுபல்லவி
புவனமுண்டுமிழ்ந்த கேசவன் நேசனை
குவலயம் கொண்டாடும் பரமேச்வரனை
சரணம்
சிவகாமியைத் தன் மடியில் வைத்திருப்பவனை
உவகையுடனடியர்க்கு நலமளிக்குமீசனை
சிவ கணங்களும் நந்தியும் நான்முகனும்
நவக் கிரகங்களும் நாளும் பணிந்தேத்தும்
தவ யோகியர் ஞானியர் முனிவர்கள் துதித்திடும்
புவனேச்வரனை பூமிநாதனை
கவலை பிணியிடரனைத்தையும் நீக்கிடும்
சிவகாமேச்வரனை சிதம்பரநாதனை
No comments:
Post a Comment