கொன்றைவார் சடையனே….
பல்லவி
கொன்றைவார் சடையனே திருவோத்தூர் சிவனே
உன்றன் புகழ் பாடி உனைத் துதித்தேனே
அனுபல்லவி
குன்றைக் குடையாக்கிப்பிடித்த கேசவன் நேசனை
மன்றத் தலைவனாய் மதுரையை யாண்ட ஈசனை
சரணம்
கன்றைப் பசுவழைப்போலுனையழைத்தேனே தேனே
பொன்றாத புகழ் மேவும் கயிலாய வாசனே
உன்றனருளின்றி ஓரணுவுமசையுமோ
இன்றும் என்றும் நீயே என் துணை
திருவோத்தூரில் முதற்பொருளாக விளங்குபவரே! மகரந்தம் பொருந்திய கொன்றை மலர் விளங்கும் திருமுடியை உடைய தலைவரே! என்றழைத்து உமது அழகினைப்புகழ்ந்து ஓதாதவர் உளரோ? அருள் நல்குவீராக.
தாதார் கொன்றை
தயங்குமுடியர் முயங்குமடவாளைப்
போதார்பாக மாகவைத்த
புனிதர் பனிமல்கும்
மூதாருலகில் முனிவருடனாய்
அறநான் கருள்செய்த
காதார் குழையர் வேதத்திரளர்
கயிலை மலையாரே!
கைலாயத்தின் மேற்கு முகம், நந்தியாருடன்! Mount Kailash West Face With Nandi!
Picture Captured on May 7th 2017 standing right below west face! 🕉️
No comments:
Post a Comment