பார்வதி பரமசிவனாக…..
பல்லவி
பார்வதி பரமசிவனாக க்காட்சி தரும்
பர்வதம் தனை த்துதித்தேன்
அனுபல்லவி
பார் புகழுமென்னீசன் கேசவனும் போற்றும்
சீர் மிகுந்த தெய்வத் தம்பதியரான
சரணம்
வார்த்தைகளுமதன் பொருளுமொன்றாகக்
கோர்வையுடனமைந்தது போலமைந்திருக்கும்
ஈருருவுமொன்றான உலகின் தாய் தந்தையரை
நேர் நின்று காணும் பாக்கியத்தையளித்த
No comments:
Post a Comment