கண்ணனுக்குப் பிரியமான….
பல்லவி
கண்ணனுக்குப் பிரியமான துளசியைத் துதித்தேன்
பண்ணிசைத்ததன் புகழைப் பாடிக் கொண்டாடி
அனுபல்லவி
தண்மதி முகத்தோன் தாமரை நாபன்
எண்ணமெலாம் நிறைந்திருக்கும் சென்னகேசவன்
சரணம்
உண்டுலகுமிழ்ந்த யசோதை பாலன்
புண்டரீகாக்ஷன் திருவுறை மணிமார்பன்
அண்ட சராசரங்கள் தனையாளுமழகனவன்
வண்ணமிகு மார்பை மாலையாயலங்கரிக்கும்
No comments:
Post a Comment