மாமனைப் போலவே …..
பல்லவி
மாமனைப் போலவே மயில் பீலியணிந்தவனை
பூமண்டலம் போற்றும் முருகனைத் துதித்தேன்
அனுபல்லவி
காமனையெரித்த சிவபெருமான் மகனை
தாமரை நாபன் கேசவன் மருகனை
சரணம்
மாமறைகள் போற்றும் சிங்காரவேலனை
ஓமெனும் மந்திரத்தின் பொருளுறைத்த குருபரனை
கோமகள் பார்வதியின் பாலனை வேலனை
பாமரரும் பண்டிதரும் பணிந்தேத்தும் முருகனை
நாமங்கள் பல உடைய கார்த்திகேயனை
நாமகளும் பூமகளும் கொண்டாடும் குமரனை
சேமங்கள் நல்கிடும் செல்வமுத்துக்குமரனை
தூமலர் தூவி மலர்ப்பதம் பணிந்து
No comments:
Post a Comment