சரஸ்வதி.....
பல்லவி
சரஸ்வதி உந்தன் சரணகமலங்களை
நமஸ்கரித்தருள் தர வேண்டினேனே
அனுபல்லவி
நரஸ்துதி நாடும் மனிதரை நானென்றும்
புரஸ்கரித்திட அருள் வேண்டினேனே
சரணம்
இராக பாவங்கள் தாளங்கள் சேர்ந்து
எதுகை மோனை ப்ராஸமுமிணைந்து
இலக்கிய இலக்கண விதிகளுமமைந்து
இசையுடன் சொற்பொருள் நவரசம் குவிந்து
துரிதம்
பரஸ்பரமிருவரும் இரண்டறக் கலந்து
பாடும் பாடல்கள் பலருக்கும் விருந்து
இராகம்: சரஸ்வதி
தாளம் : கண்டசாபு
No comments:
Post a Comment