ரங்கனை.......
பல்லவி
ரங்கனை நினைந்திடுவாய் மனமே — சா
நினைத்தால் வருமே குணமே இனிமேல் தினமே
அனுபல்லவி
முங்கிடச் செய்யும் பொங்கும் பவக்கடல் கடந்திட
பங்கயநாபன் பாண்டவர்நேசன் பாற்கடல் வாசன் பரமானந்தன்
சரணம்
ரங்கநாயகி தங்கும் மணிமார்பன்
எங்கும் நிறைந்த ஏழைப்பங்காளன்
பார் புகழ் சென்னையில் கேசவன் போற்றும்
சென்னகேசவன் சாரங்க பாண்டுரங்க திருவரங்க......
No comments:
Post a Comment