கற்பகவல்லியின்....
பல்லவி
கற்பகவல்லியின் பொற்கரம் பற்றிய
ஈசன் மயிலை வாசன் என் நேசன்
அனுபல்லவி
பற்பல பிழைகளைப் புரியாமல் தடுத்தெனை
அற்புத தரிசனம் அளித்தாண்ட மகேசன்
அவனே சபேசன் நடேசன் சொக்கேசன்
சரணம்
கோயிலிலீசன் தரிசனம் கண்டேன்
தீயினில் பட்ட மெழுகு போல் உருகினேன்
வாயினிலிட்ட கற்கண்டாய்க் கரைந்தேன்
நோயினில் உட்கொண்ட மருந்தென நினைந்தேன்
துரிதம்
தாயினும் மிகுந்த பரிவுடன் தயைபுரிந்து
சேயெனைக் கனிவுடன் காத்த தயாபரன்
இராகம் : மலையமாருதம்
தாளம் : ஆதி
No comments:
Post a Comment