அம்மையேயப்பா......
பல்லவி
அம்மையேயப்பா என்றழைத்தேனே தேனே
இம்மைக்கும் மறுமைக்கும் எந்தன் துணை நீயே
அனுபல்லவி
தம்மை நினைந்தோர்ககு தயவளிக்கும் தாயன்றோ
எம்மை மட்டும் சோதித்தல் எருதுவாகனனே நன்றோ
சரணம்
தந்தையே அன்று நீ தாயுமானாய்
விந்தையே சேயெனை நீ தள்ளலாகுமோ
உன் தயை இல்லையேல் உள்ளம் களிக்குமோ
உலகில் உன்னருள் இன்றியோர் பொருள் வேண்டிலேன்
இராகம் : நாதநாமக்ரியா
தாளம் : சாபு
No comments:
Post a Comment