பரமபுருஷனே .......
பல்லவி
பரமபுருஷனே பரந்தாமனே சரணம்
சரணம் என்றுன் சரணம் பணிந்தேன்
அனுபல்லவி
மரணம் பிறப்பெனும் மாயச்சுழலில்
மயங்கித் தவிக்குமென் மனமொரு நிலைபெற
சரணம்
திருமகள் பொழியும் செல்வச்செழுப்பின்
வரவும் செலவும் வகையறிந்தெழுதுமென்
கரம்தனைக் குவித்து சிரம்தனைத் தாழ்த்தி
அரவணை துயிலுறும் அரங்கனுனை வாழ்த்தி
இராகம் : சுநாதவிநோதினி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment