உன்னையழைத்தேன்......
பல்லவி
உன்னையழைத்தேன் என் சென்ன கேசவா
என்னோடு விளையாட வரவேண்டும் என்றே
அனுபல்லவி
வெண்ணை பால் தயிர் வேண்டியது நான் தருவேன்
மண்ணையுண்ட வாயனே என் அன்புத் தோழனே
சரணம்
மின்னலைப் பழிக்கும் புன்னகையுதிர்க்கும்
கண்ணனே அனைத்தும் அர்ப்பணம் உனக்கே
என்னையே கேசவன் உன்னிடம் தந்தேன்
இன்னமும் என்னிடம் பிணக்கென்ன கண்ணனே
இராகம் : நவரசகன்னட
தாளம் : ஆதி
No comments:
Post a Comment