அன்னையே........
பல்லவி
அன்னையே உன்னையே தஞ்சமென்றடைந்தேன்
என்னையே உன்னிடம் பறிகொடுத்தேன் பரிதவித்தேன்
அனுபல்லவி
தன்னையே தந்துனை வேண்டினேன் அன்னையே
என்னையே உன்னிடம் அழைத்தாண்டு கொள்வாயே
சரணம்
பொன்னையும் பொருளையும் புண்ணிய பலனையும்
வேண்டேன் கொன்றை சூடியினிடமிருப்பவளே
துரிதம்
முன்னை யான் செய்த கருமங்கள் தொலைந்து
பின்னையும் பிறவா வரமொன்றினையே உன்னை வேண்டினேன்
அன்னையே மட்டுவார் குழலி அம்மையே
இராகம்: நாட்டகுறிஞ்சி
தாளம் : கண்டசாபு
No comments:
Post a Comment