இருகரம் கூப்பி........
பல்லவி
இருகரம் கூப்பித் தொழுவோர்க்கெல்லாம்
அருட்கரம் நீட்டும் ஆதி கேசவா
அனுபல்லவி
பெரும்பிணி பவக்கடல் கடந்திட எனக்குன்
திருவருள் தந்தருள் எந்தன் கேசவா
சரணம்
பெரும் பொருள் செல்வம் வேண்டிலேன் கேசவா
மருகியுன் நாமம் மனத்தினில் கேசவா
உருகித் துதித்தேன் உன்னருள் கேசவா
பெருகிட வேண்டினேன் ப்ரியனே கேசவா
வரும் பொருள் யாவும் வரும் வழி சென்றிடும்
இருவினைப் பயன்களே இறுதியில் நிலைத்திடும்
பருகும் நீரும் கேசவா உண்ணும் உணவும் கேசவா
நீயென நினைந்துன் திருவடி பணிந்தேன் கேசவா ஆதிகேசவா
இராகம் : கமாஸ்
தாளம் : ஆதி
No comments:
Post a Comment