மல்லீச்வரனே.......
பல்லவி
மல்லீச்வரனே மாதயாகரனே
மாதா உமையொரு பாகமுளோனே
அனுபல்லவி
தெள்ளு தமிழ் வளர்த்த சங்கம்தனை வளர்த்த
நக்கீரன் பழித்த முக்கண்ணனே
சரணம்
கல்லாலும் வில்லாலும் காலாலுமதைத்த
எல்லோர்க்குமருள் தந்த கருணாகரனே
சொல்லாலுனைப்பாடி மனமாரத்துதிக்கும்
நல்லான் கேசவனைக் காத்தருள்வாயே
இராகம் : சக்கரவாகம்
தாளம் : ஆதி
No comments:
Post a Comment