தாயே......
பல்லவி
தாயே நீயே துணை மீனாக்ஷி
தென் மதுரையில் உந்தன் ஆட்சி
அனுபல்லவி
மாயே மலையத்வஜன் சேயே
மனங்கவர் சுந்தரேசப்ரியே
சரணம்
நல்லதும் தீயதும் நானறியேனே
சொல்வார் பேச்செலாம் கேட்டலைந்தேனே
பொல்லா மாயப் பிணியில் வீழ்நதேனே
எல்லாம் தொலைந்தென் ஜெனமம் ஈடேற
இராகம் : தோடி
தாளம் : ரூபகம்
No comments:
Post a Comment