திருமறைப்பொருளே....
பல்லவி
திருமறைப் பொருளே செழுநீர் திரளே
திருவானைக்காவிலுறை ஜம்புகேச்வரா
அனுபல்லவி
ஒருமறையும் ஓதியிலாப் பொருளறியா கேசவனை
ஒரு குறையும் அணுகாமல் காத்த வெண்நாவலூரீசா
சரணம்
தானெனும் அகந்தையால் அலட்சியம் கொண்டு
தவயோகம் பூண்ட உமையுமை நகைத்ததால்
அவனியிலுதித்து அகிலாண்டவல்லியாய்
அருந்தவம் புரிந்திட அருளிச் செய்த
இராகம் : கல்யாணி
தாளம். : ஆதி
No comments:
Post a Comment