படமெடுத்த......
பல்லவி
படமெடுத்த பாம்பணிந்த பரமசிவா - (விடமுண்ட கண்டமதில்)
உன்றன் இடமமர்ந்த உமையவளின் பாதம் பணிந்தேன்
அனுபல்லவி
புடமிட்ட பொன்னே மாமணியே - (புகழ் சென்னை பதியமர்ந்த)
கேசவன் நான் போற்றும் மல்லீச்வரனே
சரணம்
தடம் புரண்டு மூவாசைப் பிணிதனையே வளர்க்கும்
அடம் பிடிக்கும் மனக்குரங்கை அடக்காமலே
குடம் குடமாய்ப் பாலாபிஷேகம் செய்தும்
வடம் பிடித்துன் ரதமிழுத்தும் லாபமென்ன
இராகம் : வலஜி
தாளம் : க.சாபு
No comments:
Post a Comment