அரவணை துயிலுறும்.......
பல்லவி
அரவணை துயிலுறும் அனந்த பத்மநாபனே
சரணம் சரணமென்றுன் பாதம் பணிந்தேன்
அனுபல்லவி
திருமகள் மார்பில் நாபியில் நான்முகன்
திரிபுரமெரித்த பரமனொருபுரம்
துரிதம்
தேவர்கள் யோகியர் நரத முனிவர்
அனைவரும் அருகினில் அடிபணிந்திருக்கும்
சரணம்
ஐயிரண்டவதாரம் அவனியிலெடுத்து
நல்லவர் உய்யவும் தீயவர் மாயவும்
செய்திடும் அய்யனே உன்னருள் இல்லையேல்
அணுவுமசையுமோ ஆராவமுதே
இராகம் : பூபாளம்
தாளம் : ஆதி
No comments:
Post a Comment