கானக்குழலோசை....
பல்லவி
கானக் குழலோசை .....வேணு
கானக்குழலோசை கேசவனே நான்கேட்டு
வேய்ங்குழலில் நீ ஊதும் .... வேணு
கானக் குழலோசை கேசவனே நான்கேட்டு
காதினிக்க மனம் குளிர மெய்சிலிர்த்தேன் எனைமறந்தேன்
அனுபல்லவி
மோனத்தவமியற்றும் முனிவர்களும் ஞானியரும்
நாணம்தனை மறந்த கோபியரும் மற்றும்
ஆவினமும் பறவைகளும் அனைத்துலக வாசிகளும்
வாய் பிளந்து கேட்கும் .......வேணு
சரணம்
தேனைக் குழைத்து கனிவகைகள் சேர்த்து
தானே வாயிலிடும் மான்விழியாள் தனை மறந்தேன்
உன்னை மறந்தேன் உயிரையும் மறந்தேன்
உன்னைக் கூடும் பேரின்ப நிலையடைந்தேன்
இராகம் : காப்பி
தாளம் : ஆதி
No comments:
Post a Comment