காசிநாதனை........
பல்லவி
காசிநாதனை விச்வநாதனை காமேச்வரனை நேசித்தேன்
ஆசி வேண்டி மாசிலாதமணி ஈசன் திருவடி பூசித்தேன்
அனுபல்லவி
காசு வேண்டிலேன் ஏசுவார்கள்தம் பாசம் வேண்டிலேன்
காதலாகினேன் சாதலின்றியே மோட்சம் பெறவே
சரணம்
ஊசலாடுமுயிர் உடலிலுள்ள வரை கேசவன்நானுனை மறவேனே
வாச மலராய் வீசுதென்றலாய் வாழ்வினில் வந்த செல்வமே
மோசமான வழி நாடாமல் காத்து அயன் புரம் நின்ற
நேசமோடு எனையாண்ட தேனைப் பரம் பொருளை
இராகம் : சங்கராபரணம்
தாளம் : மிச்ர சாபு
No comments:
Post a Comment