வெற்றிக்கு.......
பல்லவி
வெற்றிக்கு வழி தேடி சுற்றித் திரிந்தேன்
சுற்றம் சுகம் யாவும் முற்றும் துறந்தேன்
அனுபல்லவி
குற்றம் குறை களையும் உற்றவன் உன்பதம்
பற்றினேன் உன்னருள் பெற்றிலேன் இன்னமும்
சரணம்
கற்றிலேன் மறையொன்றும் முறையுடன் ஆயினும்
புற்றிலே சுயம்புவாய் திகழ்ந்திடும் உன்னையே
முற்றிலும் நம்பினேன் நெற்றிக்கண் உடையோய்
ஒற்றுயூர் தியாகேசன் கேசவன் நேசன்
இராகம் : அடாணா
தாளம் : க.சாபு
No comments:
Post a Comment