கற்பக தருவே
பல்லவி
கற்பக தருவே கற்பகாம்பிகே
சிற்பமாய் நிற்குமுன் பொற்பதம் பணிந்தேன்
அனுபல்லவி
தற்பரன் தன்னிடம் கொண்ட தயாபரி
நற்கதி நல்கியே தயைபுரிவாயே
சரணம்
விற்பன்னர் போற்றிடும் அற்புத பாடல்கள்
பற்பல பண்களில் கற்பனைத் திறனுடன்
சொற்பொருள் சுவையுடன் நற்றமிழ் மொழிதனில்
அற்பன் நான் கேசவன் பாடிட அருள்வாயே
இராகம் : சுத்த சாவேரி
தாளம். : ஆதி
No comments:
Post a Comment